ETV Bharat / state

திருவாரூரில் அரசுடைமையாக்கப்பட்ட சசிகலா சொத்துக்கள்!

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன என மாவட்ட ஆட்சியர் சாந்தா அறிவித்துள்ளார்.

author img

By

Published : Feb 10, 2021, 5:37 PM IST

Tamil Nadu govt confiscates  sasikala assets in thiruvarur
திருவாரூரில் அரசுடமையாக்கப்பட்ட சசிகலா சொத்துகள்

திருவாரூர்: நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி வந்த சசிகலா தற்போது சென்னையில் தங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சசிகலா, அவருடன் சிறை தண்டனை அனுபவித்த உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற மேல்முறையீடு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பில் திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை பகுதியில் செயல்பட்டு வந்த ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ள சசிகலா சுதாகரன் இளவரசி உள்ளிட்டோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என்ற குறிப்பிடப்பட்டது. இந்த உத்தரவின்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டதாக ஆட்சியர் சாந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Tamil Nadu govt confiscates  sasikala assets in thiruvarur
திருவாரூரில் அரசுடைமையாக்கப்பட்ட சசிகலா சொத்துக்கள்

மேலும், அரசுடைமையாக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு சொத்துக்கள் என்றும் சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருவாய், வாடகை, நிலுவையிலுள்ள வாடகைத் தொகை அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை எழுச்சியாக பார்க்கிறேன்- பொன். ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.