கரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தொற்று நோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த நில அளவையர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் மற்ற அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.