தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 4 நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வங்கிகளில் கடன் பெற்று ஏக்கருக்கு ஆயிரக்கணக்கில் விவசாயிகள் செலவு செய்துள்ளனர். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் விபத்து!