ETV Bharat / state

எலிக்கு வைத்த மருந்தைச் சாப்பிட்ட சிறுவர்கள் - உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை - Treating students in Thiruvarur life-threatening condition

திருவாரூர்: எலிக்கு வைத்த மருந்தைச் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
author img

By

Published : Feb 12, 2020, 3:46 PM IST

திருவாரூர் மாவட்டம் தலையாமங்களம் அருகே உள்ள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன்கள் கிஷோர் (8), ஜஸ்வின் (6) மற்றும் செந்தில் குமார் (5). இவர்கள் மூவரும் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்நிலையில் பள்ளி செல்ல தாமதமானதால் அவர்கள் வீட்டில் அருகில் இருந்த பாசமலர் என்பவரின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவர்கள் மூவரும், அங்கிருந்த அரிசியை எடுத்துச் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு பாசமலர் அரிசி சிதறி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து விசாரித்தார். அதில் சிறுவர்கள் மூன்று பேரும் எலிகளைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எலி மருந்து கலந்த அரிசியை சாப்பிட்டது தெரியவந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை

இதனையடுத்து அவர் சிறுவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்களின் பெற்றோர், மூவரையும் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மூவரையும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பேராசிரியர்கள் கண்டித்ததால் தற்கொலைக்கு முயற்சித்த மாணவன்!

Intro:Body:மன்னார்குடி அருகே எலி மருந்தை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் தலையாமங்களம் அருகே 72-குறிச்சி கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன்கள் கிஷோர்,ஜஸ்வின், மற்றும் செந்தில்குமார் என்பவரின் மகன் குமரராஜ் மூவரும் அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பள்ளி செல்ல தாமதமானதால் வீட்டில் தங்கி அருகில் இருந்த பாசமலர் என்பவரின் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர்.

மேலும் எதிர்பாராத விதமாக சிறுவர்கள் மூவரும் அங்கிருந்த அரிசியை எடுத்து சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய பாசமலர் வீட்டில் இருந்த பாத்திரங்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து விசாரித்ததில் சிறுவர்கள் மூன்று பேரும் எலிகளை பிடிக்க அரிசியில் எலி பேஸ்ட் மருந்தை கலந்து வைத்திருந்த அரிசியை சிறுவர்கள் சாப்பிட்டது தெரியவந்தது.

இதனை அறிந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மூவரையும் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மூவரையும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி அனுப்பி வைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.

பள்ளி மாணவர்கள்.
கிஷோர் 3-வகுப்பு 8 வயது
ஜஸ்வின் 2-வகுப்பு 6 வயது
குமரராஜ் 1-வகுப்பு 6 வயது.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.