திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி, அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன் தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அவசர சிகிச்சை மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் நகரச் செயலாளர் பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'ஸ்டாலின் கனவு பலிக்காது... மீண்டும் அதிமுகதான்' - பொள்ளாச்சி ஜெயராமன்