திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றதை தொடர்ந்து அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக நன்னிலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் நன்னிலம் பகுதியில் முழுவதும் நெல் அறுவடை இயந்திரம் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் உரிய நேரத்தில் அறுவடை செய்ய முடியாததால் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து ஒடிந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் அறுவடை இயந்திரங்கள் 100க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அதனை ஏஜெண்டுகளிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி நன்னிலம் பகுதிகளுக்கு இயந்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் போராடி பெற்றது 7.5 % இட ஒதுக்கீடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்