தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆலமன் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் எம்.பில்., பயின்று வருகிறார். இவர் தனது ஆய்வுக் கட்டுரையை அக்கல்லூரிப் பேராசிரியர் ரவிச்சந்திரன் என்பவரிடம் சமர்ப்பித்துள்ளார்.
அதனை சரிபார்த்த பேராசிரியர், கட்டுரையில் சிலவற்றை மேற்கோள் காட்டி கையெழுத்து போட மறுத்ததோடு சாதி ரீதியாக மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி இன்று கல்லூரி ஆய்வகத்தில் இருந்த உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயணத்தை அருந்தியுள்ளார். பின்னர் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.
இது பற்றி தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மாணவியின் பெற்றோர், தனது மகளை சாதி ரீதியாக துன்புறுத்தி மன உளைச்சலை ஏற்படுத்திய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.