ETV Bharat / state

ஊடகக் கண்காணிப்பு மையத்தில் ஆட்சியர் சாந்தா ஆய்வு - திருவாரூர் மாவட்ட ஆட்சியர்

திருவாரூர்: ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகக் கண்காணிப்பு மையத்தில் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாந்தா ஆய்வு மேற்கொண்டார்.

district collector santha inspection
மாவட்ட ஆட்சியர் சாந்தா ஆய்வு
author img

By

Published : Mar 13, 2021, 1:42 PM IST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் இயங்கி வரும் ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடகக் கண்காணிப்பு மைய செயல்பாடுகளை மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வே.சாந்தா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் அவர் கூறியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களைக் கண்காணிக்க ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் செய்தித்தாள்களில் வெளிவரும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்கள், பரப்புரை செய்திகள், வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் கருத்துகள் ஆகியவைகள் கண்காணித்து பதிவு செய்யப்படும்.

இதற்காக ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடகக் கண்காணிப்பு மையம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தொலைக்காட்சி செய்திகளைப் பார்வையிட வசதியாக எட்டு தொலைக்காட்சிகளும், தேவைப்பட்ட செய்திகளை பதிவு செய்ய பிரத்யேக வன்பொருள் மற்றும் மென்பொருள் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

நியமன அலுவலர்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது" என்றார்.

இந்த நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் தனபால், வட்டாட்சியர் திருமால் மற்றும் ஊடக சான்று மையத்தின் நியமன அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம் வேலூர் சிப்பாய் நினைவிடத்தில் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.