ETV Bharat / state

'உழவருக்கு இழப்பீட்டுத் தொகை விடுவித்த ஒன்றிய, மாநில அரசுக்கு நன்றி!' - திருவாரூர்

2020-21 காப்பீடு செய்த உழவருக்கு இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு என அறிவித்த ஒன்றிய, மாநில அரசுகளுக்குத் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.

பி.ஆர் பாண்டியன்
பி.ஆர் பாண்டியன்
author img

By

Published : Oct 11, 2021, 6:44 AM IST

திருவாரூர்: இது குறித்து தமிழக பி.ஆர். பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சம்பா சாகுபடி செய்த உழவர் தங்களது பயிருக்கு காப்பீடு செய்திருந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் பருவம் மாறி பெய்த பெருமழையால் காவிரி டெல்டாவில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஒட்டுமொத்த விளைநிலமும் அழிந்துபோனது.

எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அவசர அவசரமாக கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட உழவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தமிழ்நாடு அரசு விரைந்து நிவாரண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தியிருந்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் மூலமாக இடுபொருள் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இழுத்தடித்த காப்பீடு நிறுவனம்

காப்பீடு செய்த உழவருக்கு அறுவடை ஆய்வறிக்கை முடிந்து மூன்று மாத காலத்திற்குள்ளாக (ஜூன்) இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால் காப்பீட்டு நிறுவனம், ஒன்றிய, மாநில அரசுகளைக் காரணம் கூறி இழப்பீடு வழங்க காலதாமதமாக்கியது.

இதனை அறிந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இழப்பீட்டுத் தொகை கேட்டு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டது.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

இதனையடுத்து, தமிழ்நாடு அரசு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு உடனடியாக இழப்பீட்டுற்கான மாநில அரசின் பங்குத் தொகையை விடுவிப்பதாகவும், விரைவில் ஒன்றிய அரசை அணுகி இழப்பீடு பெற்று 15 நாள்களுக்குள் உழவர் வங்கிக்கணக்கில் வரவுவைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதற்கு, மதிப்பளித்து அறிவிக்கப்பட்ட போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மீண்டும் கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரையிலும் வழங்க காலதாமதம் ஆனதால் ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து செப்டம்பர் 30ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக காவிரி விவசாயிகள் சார்பில் பல்லாயிரக்கணக்கான உழவர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த, ஒன்றிய அரசு உடனடியாக தனது பங்குத் தொகையை வழங்கிய நிலையில் தற்போது காப்பீடு நிறுவனம் மூலமாக இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளதாகவும், 10 நாள்களுக்குள்ளாக உழவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வந்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இது பாராட்டுக்குரியது, உடனடியாக நிதியை ஒதுக்கீடு செய்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உழவர் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஆட்கள் பற்றாக்குறையால் கருகும் பருத்தி; வருந்தும் உழவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.