ETV Bharat / state

’எப்பவுமே அதிமுகதான் நம்பர் ஒன்’ - ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன், கரும்பு,அரசி, முந்திரி உள்ளடங்கிய சிறப்பு பரிசு

திருவாரூர்: உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று அதிமுக முதலிடத்தில் இருப்பதாகக் கூறிய உணவுத் துறை அமைச்சர் காமராஜ் எப்போதுமே அதிமுகதான் முதலிடத்தில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

minister_kamaraj_
minister_kamaraj_
author img

By

Published : Jan 6, 2020, 2:23 PM IST

Updated : Jan 6, 2020, 2:30 PM IST

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கீழவிதியிலுள்ள நியாயவிலைக் கடையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ், பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பை தொடங்கி வைத்தார். பொங்கலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 763 குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும் 721 நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. அதன் முதல்கட்டமாக ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன், கரும்பு, அரிசி, முந்திரி உள்ளடங்கிய சிறப்புப் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "அதிமுகவுக்கு என கொள்கை நிலைப்பாடு உள்ளது. அதனடிப்படையில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இருப்பினும், இலங்கை மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதிலும் இந்தியாவிலுள்ள அனைத்து சிறுபான்மையினர்க்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு விழாவில் அமைச்சர் காரசார பேச்சு

உள்ளூரில் எங்களுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அதிகளவில் வெற்றிபெற்றுள்ளது. நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெற்றது. இவ்வாறு அதிமுக தொடர்ந்து வெற்றிபெற்று கொண்டுதான் இருக்கிறது. இன்னும் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதும் அதிமுகதான் முதலிடத்தில் உள்ளது; எப்போதும் அதிமுகதான் முதலிடத்தில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனை பின்புறம் அழுகிய நிலையில் ஆண் சிசு; போலீஸ் விசாரணை!

Intro:

Body:உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவும் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது, இன்றைக்கும் என்றைக்கும் அதிமுக தான் முதலிடத்தில் இருக்கும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி.

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கீழவிதியில் உள்ள நியாயவிலை கடையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பொங்கள் சிறப்பு பரிசு தொகுப்பை தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் 3லட்சத்து 63ஆயிரத்து 763குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு துறை மூலம் செயல்படும் 721 நியாய விலைக்கடைகளில் பொங்கள் பரிசு வழங்கப்பட உள்ளது. அதன் முதற்கட்டமாக
ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன், கரும்பு,அரசி, முந்திரி உள்ளடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு அமைச்சர் காமராஜ் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,

அதிமுகவுக்கு என கொள்கை நிலைபாடு உள்ளது, அதனடிப்படையில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் இலங்கை மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதிலும், இந்தியாவில் உள்ள எந்த ஒரு சிறுபான்மையினர்க்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.

உள்ளூர்களில் எங்களுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தபோதிலும்
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது. நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றது. இவ்வாறு அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டுதான் இருக்கிறது. இன்னும் ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது, நகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்றைக்கும் அதிமுக தான் முதலிடத்தில் உள்ளது.என்றைக்கும் அதிமுக தான் முதலிடத்தில் இருக்கும் என தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Jan 6, 2020, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.