ETV Bharat / state

விஷம் கலந்த வைக்கோலை தின்ற மூன்று மாடுகள் இறப்பு - thiruvarur district news

திருவாரூர்: கர்ணாவூரில் அறுவடை செய்த நெற்பயிர்களைப் பாதுகாக்க விஷம் வைத்து மாடுகளை கொன்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

poisoning-of-cows-to-protect-crops-in-thiruvarur

author img

By

Published : Feb 22, 2021, 10:34 PM IST

திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் அடுத்துள்ள கர்ணாவூர் கிராமத்தில் தற்போது சம்பா அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் விளைநிலங்கள் தரிசாக உள்ளது. இந்நிலையில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கிராம மக்கள் கால்நடைகளை வயல் வெளிகளில் மேய்ப்பது வழக்கம்.

கர்ணாவூரைச் சேர்ந்த கீர்த்தி என்பவருக்குச் சொந்தமான விளை நிலத்தில் கோபால் என்பவர் தனது மூன்று மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்டுள்ளார். இந்நிலையில், கீர்த்தி அறுவடை செய்த நெல்லை கால்நடைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக வைக்கோலை கொண்டு மூடி வைத்து பூச்சி மருந்தைத் தெளித்ததாகக் கூறப்படுகிறது.

பயிர்களை காக்க மாடுகளுக்கு விஷம்

வயல் வெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல், வைக்கோலை கோபாலின் மாடுகளும் மேய்ந்துவிட்டு அருகில் இருந்த விஷம் கலந்த நீரையும் மாடுகள் குடித்ததால் மூன்று மாடுகளும் உயிரிழந்தன. பின்னர், இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் பெருகவாழ்ந்தான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

இரும்பு வேலியில் சிக்கி கடமான் இறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.