நன்னிலத்தில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர் பானுகோபனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த முறைகள் போல், மூன்றாவது முறையாகவும் அதிக வாக்கு வித்தியாசத்தில் நன்னிலம் மக்கள் என்னை வெற்றிபெற வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் மறுபிறவி எடுத்து தேர்தலில் போட்டியிட வந்துள்ளேன். எனவே, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இம்முறையும் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்றார்.
இதையும் படிங்க: அனுமதியின்றி கூட்டம்: பூவை ஜெகன்மூர்த்தி மீது வழக்குப்பதிவு