ETV Bharat / state

ஃபேஸ்புக்கில் பணமோசடி செய்யும் வடமாநிலத்தவர்கள்! - Northerners committing money laundering on Facebook

திருவாரூர்: வழக்கறிஞரின் சமூக வலைதளக் கணக்கை தவறாகப் பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தவரை சைபர் க்ரைம் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ஃபேஸ்புக் பணமோசடி  ஃபேஸ்புக் மோசடி  ஃபேஸ்புக்கில் பணமோசடி செய்யும் வடமாநிலத்தவர்கள்  Facebook money laundering  Facebook scam  Northerners committing money laundering on Facebook  திருவாரூர் மாவட்ட செய்திகள்
Facebook scam
author img

By

Published : Apr 27, 2021, 7:43 PM IST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வழக்கறிஞர் சங்க செயலாளராகவும், தேமுதிக நகரக் கழகச் செயலாளராகவும் உள்ளார். செந்தில்குமார் முகநூல் பக்கத்தை 10 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார். இதனால், ஆயிரக்கணக்கானோர் செந்தில் குமாரின் முகநூல் பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர்.

பணமோசடி

இதைக் கண்ட உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வழக்கறிஞர் செந்தில் குமாருடைய முகநூல் பக்கத்தை தவறாகப் பயன்படுத்தி, அதன் மூலம் செந்தில்குமாரின் சமூகவலைதள நண்பர்கள் வட்டாரத்தில் பணமோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையறிந்த, செந்தில்குமார் உடனடியாக இது குறித்து சைபர் க்ரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

ஃபேஸ்புக் பணமோசடி  ஃபேஸ்புக் மோசடி  ஃபேஸ்புக்கில் பணமோசடி செய்யும் வடமாநிலத்தவர்கள்  Facebook money laundering  Facebook scam  Northerners committing money laundering on Facebook  திருவாரூர் மாவட்ட செய்திகள்
வழக்கறிஞர் செந்தில்குமார் ஃபேஸ்புக் கணக்கு

வழக்குப்பதிவு

அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளியைத் தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வடமாநிலத்தவர்கள் மற்றவர்களின் சமூக வலைதளக் கணக்குகளை தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருவதால், இது தொடர்பாக தமிழ்நாடு அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நிரம்பி வழியும் தகன மேடைகள்... பார்கிங்கில் 100-க்கும் மேற்பட்டோர் தகனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.