ETV Bharat / state

நெல் ஜெயராமனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடிய விவசாயிகள்

author img

By

Published : Apr 16, 2021, 3:42 PM IST

பாரம்பரிய நெல் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் சிறு மற்றும் குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரொக்க பரிசுடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தவேண்டும்.

நெல் ஜெயராமனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடிய விவசாயிகள்
நெல் ஜெயராமனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடிய விவசாயிகள்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் பிறந்தநாளை விவசாயிகள் கொண்டாடினர்.

திருத்துறைப்பூண்டி, ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் ஜனாதிபதி விருது பெற்ற பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமனின் 53ஆவது பிறந்த நாள் விழா ஆதிரெங்கம் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஆதிரெங்கம் ஊராட்சி மன்ற தலைவரால் மரக்கன்று நடப்பட்டு, பாரம்பரிய இயற்கை வேளாண்மையை அனைவரும் முன்னெடுக்கவேண்டும், நஞ்சில்லாத உணவை அனைவரும் உண்ணுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து விவசாயிகளும் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்..

பின்னர் இதனைத்தொடர்ந்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..அவை, இயற்கை வேளாண்மையில் பாரம்பரிய நெல் சாகுபடியை அனைத்து விவசாயிகளும் மேற்கொள்ள தமிழக வேளாண்மை துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஊடகங்கள் வாயிலாகவும், தெருமுனை பிரச்சாரங்களாகவும் செய்ய வேண்டும்.இயற்கை வேளாண்மையில் விளைந்த பாரம்பரிய விளைபொருட்களை தமிழக அரசு வேளாண்மை துறை மூலம் கொள்முதல் செய்து அதை மதிப்புக்கூட்டி நேரடியாக நுகர்வோருக்கு மானிய விலையில் விற்பனை செய்து நஞ்சில்லாத உணவு அனைவருக்கும் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.பாரம்பரிய நெல் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் சிறு மற்றும் குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரொக்க பரிசுடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தவேண்டும்.பாரம்பரிய இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் தற்சார்பு முறையில் இடுபொருட்கள் தயாரித்து கொள்வதற்கு தமிழக அரசு வேளாண்மை துறை மூலம் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.தமிழக மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யக்கூடிய பயிற்சிகளை தமிழக அரசு வேளாண்மைத்துறை மூலம் அளித்து, மகளிர் சுயஉதவிக்குழுவின் பொருளாதார மேம்பாடு வளர்ச்சிக்கு உதவ வேண்டும் உள்ளிட்டவையாகும்.இந்நிகழ்வில் ஊராட்சி செயலர் இளந்திரையன், வேளாண் பாதுகாப்பு மைய கள ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.