ETV Bharat / state

இயற்கை மருத்துவ தினம்: மன்னார்குடியில் இயற்கை மருத்துவ முகாம் - Natural Medicine Awareness Camp in mannargudi

திருவாரூர்: 3ஆவது இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு மன்னார்குடியில் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது.

விழிப்புணர்வு முகாம்
விழிப்புணர்வு முகாம்
author img

By

Published : Nov 19, 2020, 12:27 PM IST

மூன்றாவது இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை யோகா, இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் நடத்தியது.

விழிப்புணர்வு முகாம்
விழிப்புணர்வு முகாம்

இதில் கலந்துகொண்டு பேசிய இயற்கை மருத்துவர் செல்வம், ”பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்டு எளிய முறையில் வழங்கும் சிகிச்சைதான் இயற்கை மருத்துவம். யோகா, உணவு மூலமான சிகிச்சைகள், மண், நீர், மசாஜ், நறுமண சிகிச்சைகள், அக்குப்பஞ்சர் சிகிச்சை, இயன்முறை, இயற்கை மூலிகை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மூலம் நோய்கள் குணமாக்கப்படுகின்றன.

அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில், இத்தகைய சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்”என்றார்.

விழிப்புணர்வு முகாம்
விழிப்புணர்வு முகாம்

இம்முகாமில் நிலைய அதிகாரி மருத்துவர் கோவிந்தராஜ், இயற்கை மருத்துவர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு இயற்கை மருத்துவம் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பக்கவாதமும் மருத்துவரின் எச்சரிக்கை சிக்னலும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.