திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையில் நான்கு மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் போது கணக்கில் வராத சுமார் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 900 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நன்னிலம் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், சார்பதிவாளர் அலுவலக அலுவலர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
கோயில் குளத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து - வைரலாகும் வீடியோ!