ETV Bharat / state

"மிஸ்டு கால் கட்சி, மிஸ்டு கால் தலைவரைத் தேடிக்கொண்டு இருக்கிறது" கீ.வீரமணி அதிரடி - Missed Call Party is looking for Missed Call leader

திருவாரூர்: பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி என்பதால், தமிழ்நாட்டில் அக்கட்சிக்கான மிஸ்டு கால் தலைவரை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

Missed Call Party is looking for Missed Call leader - k Veeramani
மிஸ்டு கால் கட்சி, மிஸ்டு கால் தலைவரை தேடிக்கொண்டு இருக்கிறது - கீ.வீரமணி மரணக் கலாய்!
author img

By

Published : Feb 22, 2020, 11:02 PM IST

திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்துபோது, "மோடியை விமர்சிக்கும் வரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது என பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கூறியிருப்பது, அவருடைய பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக தான், இதற்கு முன் எத்தனையோ விஷயங்களை இதே போல தனது பதவியை தக்க வைக்கக் கூறியிருக்கிறார்.

செய்தியாளர்களை சந்திக்கும் கீ.வீரமணி.

பாஜகவினால் ஆட்களை தான் விலைக்கு வழங்க முடியுமே தவிர, தமிழ்நாட்டை விலைக்கு வாங்க முடியாது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு தலைவரை நியமனம் செய்ய முடியாத அக்கட்சியால் எப்படி தமிழ்நாட்டை கைப்பற்றி ஆட்சி அமைக்க முடியும்.

பாஜக ‘ஒரு மிஸ்டுகால் கட்சி’ எனவே அதற்கு தகுந்தார் போல் மிஸ்டுகால் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். முதலில் வீட்டை சரி செய்யட்டும், பிறகு நாட்டை சரி செய்யலாம். குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல், அதற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, அந்த சட்டத்தால் பாதிப்பில்லை என கூறிவருகின்ற அதிமுகவினர், முதலில் அதனை படித்து பார்க்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு அடிப்படை சட்டத்திற்கு, இந்த குடியுரிமை சட்டம் முற்றிலும் புறம்பானது என்றும், ஏனென்றால் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு இந்த சட்டம் மதச்சார்பின்மையை கேலிக்கூத்தாக்கும் முறையில் உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஜெ. பிறந்தநாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.