திருவாரூரில் அதிமுக மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம், உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பபடிவங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து திருவாரூர் ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து பிரிந்து அதிமுகவில் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1ஆம் தேதிமுதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், விரைவில் இது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்றார்.
மண்ணெண்ணெய் விலையேற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர், மண்ணெண்ணெய் விலை அவ்வப்போது மாற்றம் நிகழ்வது வழக்கம் என்றும், அதை விலை ஏற்றம் என எடுத்துக்கொள்ள முடியாது எனவும் கூறினார்.
இதுவரை 54 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சிலிண்டர் பயன்பாட்டை கணக்கில்கொண்டு தற்போது 11 ஆயிரம் கிலோ லிட்டர் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுவருகிறது என்றார். இருப்பினும் கூடுதலாக 33 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் கேட்டு பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.
சசிகலா விடுதலை குறித்த கேள்விக்கு, அது குறித்து பேசவேண்டிய அவசியமில்லை என்றார்.
இதையும் படிங்க: 'சசிகலா வரட்டும் பார்க்கலாம்' - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்