ETV Bharat / state

'வெள்ளிக்கிழமைகளிலும் ரேஷன் கடைகள் செயல்படும்' - அமைச்சர் காமராஜ் - thiruvarur district news

திருவாரூர்: வெள்ளிக்கிழமைகளிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என மன்னார்குடியில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டச் செய்திகள்  உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  thiruvarur district news  minister kamaraj
'வெள்ளிக்கிழமைகளிலும் ரேஷன் கடைகள் செயல்படும்' -அமைச்சர் காமராஜ்
author img

By

Published : Aug 29, 2020, 3:33 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பாமணி கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த பின் அம்மா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணிகளை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி இன்று (ஆகஸ்ட் 29) மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தில் நடைபெற்ற வரும் அம்மா பசுமை வீடு கட்டும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தேன். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் கூட்டணி குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருவாரூர் மற்றும் தஞ்சையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பத்திரிகையாளர் சந்திப்பின் போது முகக் கவசத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்ற நோக்கில் எந்தக் கருத்தையும் கூறவில்லை. அரசின் நடைமுறைகளைப் பின்பற்றி கரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான் அமைச்சர் தனது கருத்தை தெரிவித்தார்.

செப்டம்பர் மாத ரேஷன் பொருள்களுக்கான டோக்கன் இன்று முதல் 1ஆம் தேதி வரை வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படும். வெள்ளிக்கிழமைகளிலும் ரேஷன் கடைகள் செயல்படும்" என்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை: அமைச்சர் காமராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.