ETV Bharat / state

திருவாரூரில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி - 2 ஆயிரம் பயனாளிகள் பங்கேற்பு!

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.14 கோடி மதிப்புள்ள திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம் ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

author img

By

Published : Nov 8, 2019, 10:49 PM IST

தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவியுடன் 'தாலிக்குத் தங்கம்' வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் எட்டு கிராம் தங்கமும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் , பட்டப்படிப்பு அல்லாதவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் திருமண உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

திருவாரூரில் 'தாலிக்குத் தங்கம்' வழங்கும் நிகழ்ச்சி!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஏழைப்பெண்களுக்கு திருமண உதவியுடன், 'தாலிக்குத் தங்கம்' வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நடத்தபட்ட இந்த நிகழ்ச்சியில் 10 ஒன்றியங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் நபர்கள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ரூ. 6 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள திருமண உதவித்தொகையையும், ரூ. 5 கோடியே 96 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள தங்க நாணயமும் வழங்கினார்.

minister kamaraj give  merraiage incentive to  2000 beneficiaries in Thiruvarur
திருவாரூர் மாவட்ட கால்நடைகளுக்கான நடமாடும் ஆம்புலன்ஸ்

முன்னதாக திருவாரூர் மாவட்ட கால்நடைகளுக்கான நடமாடும் ஆம்புலன்ஸை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், உதவி ஆட்சியர் கிஷோர், மாவட்ட அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

கிரிக்கெட் மைதானங்களாகும் மதுரைக் கண்மாய்கள்!

Intro:

Body:திருவாரூரில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 2000 பயனாளிகளுக்கு 14கோடி மதிப்பிலான திருமண உதவியுடன், தாலிக்கு தங்கத்தினை உணவுதுறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 8 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 50ஆயிரமும், பட்டப்படிப்பு அல்லாதவர்களுக்கு 25 ஆயிரமும் திருமண உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

இன்றைய தினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர கூட்டரங்கில் ஏழைபெண்களுக்கு திருமண உதவியுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக நலத்துறை சார்பில் 10 ஒன்றியங்களை சேர்ந்த 2000 பயனாளிகளுக்கு ரூபாய் 6 கோடியே 90 லட்சம் மதிப்பிலான திருமண உதவித்தொகையும், ரூபாய் 5 கோடியே 96 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயமும் மொத்தம் ரூபாய் 14 கோடியே 41 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதி உதவி யுடன் கூடிய தாலிக்கு தங்கத்தினை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்.

முன்னதாக திருவாரூர் மாவட்ட கால்நடைகளுக்கான நடமாடும் ஆம்புலன்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உதவி ஆட்சியர் கிஷோர் ஆகியோர் மற்றும் அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.