திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக ஆறு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை கொடியசைத்து அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவாரூர் மாவட்டம் முழுவதும் 17 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. தற்போது, கூடுதலாக இரண்டு வாகனங்கள் பெறப்பட்டு ஏற்கனவே இருந்த நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் பழுது பார்க்கப்பட்டு தற்போது 23 ஆம்புலன்ஸ் சேவைகள் கிராமப்புற மக்களுக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது திமுக தலைவர் ஸ்டாலின்தானே தவிர நாங்கள் இல்லை. நாங்கள் மக்களிடம் நல்ல பாடம் கற்றுள்ளோம். மக்கள் பணி எப்படி செய்யவேண்டும் என்கிற பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளனர். மக்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது திமுக தலைவர் ஸ்டாலின் தான்.
இதையும் படிங்க: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் கே.சி. வீரமணி