ETV Bharat / state

அதிமுகவினருக்கு மோசடி என்றாலே என்னவென்றே தெரியாதாம்...! - சொல்கிறார் அமைச்சர் - thiruvarur district news in tamil

திருவாரூர்: அதிமுக முதலில் தோற்பதுபோலத்தான் இருக்கும்; ஆனால் வெற்றிபெற்றுவிடும். அதுதான் அதிமுகவின் வரலாறு என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்

Minister Kamaraj
Minister Kamaraj
author img

By

Published : Jan 12, 2020, 8:29 AM IST

திருவாரூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மூலம் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள் மறைமுகமாக தேர்வுசெய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, வெற்றிபெற்ற ஒன்றியக்குழு தலைவர்களுடன் உணவுத் துறை அமைச்சர் காமராஜ், நன்னிலம் சட்டப்பேரவை அலுவலகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களுடன் பேரணியாக வந்து நன்னிலம் பேருந்து நிலையத்திலுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ் தெரிவித்ததாவது, "தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த வெற்றி வரக்கூடிய நகராட்சித் தேர்தலிலும் நீடிக்கும்.

ஆரம்பத்திலிருந்து திமுக தேர்தலை சந்திக்கத் தயாராகவில்லை, அதன் காரணமாகவே அதிமுக மீது குறைகளைக் கூறிக்கொண்டுவருகிறது. தற்போது மறைமுகத் தேர்தலிலும் குளறுபடி உள்ளது என்று கூறிவரும் திமுகவிற்குத்தான் மோசடி செய்ய தெரியும், அதிமுகவினருக்கு மோசடி என்றால் என்னவென்றே தெரியாது" எனக் கூறினார்.

அதிமுகவினருக்கு மோசடி என்றாலே என்னவென்றே தெரியாது -அமைச்சர் காமராஜ்

நேரடி தேர்தலின் வெற்றியைவிட மறைமுகத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி விழுக்காடு மாற்றம் குறித்த கேள்விக்கு, அதிமுக வெற்றிபெறாத மாதிரி தெரியும்; இறுதியில் அதிக அளவில் வெற்றிபெறும் என பதிலளித்தார். அதுதான் அதிமுகவின் வரலாறு எனக் குறிப்பிட்ட அவர், அதிமுக தோற்றுவிட்டதாக எதிர்க்கட்சியினர் நினைப்பார்கள், பின்பு எழுந்து நின்றுவிடும் என்றார்.

தற்போது விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சம்பா சாகுபடிக்கு தேவையான கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் அதிக இடங்களில் வெற்றிவாகை சூடிய திமுக

Intro:

Body:அதிமுக முதலில் தோற்பது போல தான் இருக்கும் ஆனால் வெற்றி பெற்றுவிடும் அதுதான் அதிமுகவின் வரலாறு என சினிமா பாணியில் பதிலளித்த அமைச்சர் காமராஜ்.

திருவாரூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மூலம் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் மறைமுகமாக இன்று தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து வெற்றிபெற்ற ஒன்றியக்குழு தலைவர்களுடன் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நன்னிலம் சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து நூற்ற்க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களுடன் பேரணியாக வந்து நன்னிலம் பேருந்து நிலையத்திலுள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் தெரிவித்ததாவது,

தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடத்தில் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த வெற்றி வரக்கூடிய நகராட்சித் தேர்தலிலும் நீடிக்கும். ஆரம்பத்திலிருந்து திமுக தேர்தலை சந்திக்க தயாராகவில்லை அதன் காரணமாகவே அதிமுக மீது குறைகளை கூறி கொண்டு வருகிறது. தற்போது மறைமுகத் தேர்தலிலிலும் குளறுபடி உள்ளது என்று கூறிவரும் திமுகவிற்கு தான் மோசடி செய்ய தெரியும், அதிமுகவினருக்கு மோசடி என்றால் என்னவென்றே தெரியாது என கூறினார்.

நேரடி தேர்தலின் வெற்றியை விட மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி சதவீதம் மாற்றம் உள்ளது எனபது குறித்த கேள்விக்கு,

அதிமுக வெற்றி பெறாத மாதிரி தெரியும் பின்பு இறுதியில் அதிக அளவில் வெற்றி பெறும் இதுதான் அதிமுகவின் வரலாறு. அதிமுக தோற்றுவிட்டதாக எதிர்கட்சியினர் நினைப்பார்கள் பின்பு எழுந்து நின்று விடும். தற்போது விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சம்பா சாகுபடிக்கு தேவையான கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.