திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தியின் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்தும் டெல்லி காவல் துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், “இந்திய அரசியலமைப்பை பாதுகாத்திட நினைத்துப் போராடுபவர்கள் மீது கைது செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், டெல்லி காவல் துறையினர் அடாவடித்தனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி மீது பொய் வழக்கு தொடுத்து கைது செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டனர்.