திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் இயங்கும் லாரிகள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ரயில் நிலையத்திற்கு வரும் நெல் மூட்டைகள் அரவைக்காக தனியார் நவீன அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்வது வழக்கம்.
இதற்கு அரசு நிர்ணயித்துள்ள நியாயமான வாடகையை தனியார் நவீன அரிசி ஆலைகள் வழங்க வேண்டும். ஆனால் அந்த ஆலைகள் சரிவர வாடகை கொடுப்பதில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
3,800-க்கும் மேற்பட்ட லாரிகள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதுவரை தனியார் நவீன அரிசி ஆலை உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர் வேலை நிறுத்த போரட்டமாக தொடரும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.