காரைக்காலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கடற்கரை பூங்கா அமைக்கப்பட்டது.
இங்கு நாகை, நாகூர், வேளாங்கண்ணி, உலகப் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர ஆலயம் உள்ளிட்ட இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் ஆகியோர் வருவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது கடற்கரை பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் இருக்கைகள், சுவர்கள், குடிநீர் தொட்டிகள் அனைத்தும் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் சுற்றுலாப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, காரைக்கால் கடற்கரை பூங்காவை மறு சீரமைப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகைக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!