ETV Bharat / state

பருத்திச் சாகுபடியில் மாவு பூச்சி நோய்த் தாக்குதல் : விவசாயிகள் வேதனை - மாவு பூச்சி நோய்

திருவாரூர் மாவட்டத்தில் பருத்திச் சாகுபடியில் மாவு பூச்சி நோய்த் தாக்குதல் அதிகரித்து கொண்டே வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

பருத்தி சாகுபடியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் : விவசாயிகள் வேதனை

author img

By

Published : Apr 20, 2022, 6:47 AM IST

திருவாரூர்: திருவாரூர் முழுவதும் இந்தாண்டு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்திச் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் குறிப்பாக நன்னிலம் வலங்கைமான், குடவாசல், பேரளம், கொல்லுமாங்குடி உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் மாவு பூச்சிகளின் நோய்த் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

மேலும், மாவு பூச்சி நோய்த்தாக்குதலால் பருத்திச்செடியின் தண்டுகள் வெள்ளை நிறத்தில் காட்சியளிப்பதாலும் இலைகள் பழுப்பு நிறத்தில் மாறிவருவதாலும் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய மருந்தை பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், அதேபோல் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருத்திச் சாகுபடியில் மாவு பூச்சி நோய்த் தாக்குதல் : விவசாயிகள் வேதனை

இதையும் படிங்க: நன்னிலம் ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் தலையில் தேரை சுமந்து செல்லும் திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.