ETV Bharat / state

திருவாரூரில் அரசு மருத்துவர் உள்பட 43 பேருக்கு கரோனா பாதிப்பு! - அரசு மருத்துவருக்கு கரோனா தோற்று

திருவாரூர்: அரசு மருத்துவர் உள்பட 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 69 ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூரில் அரசு மருத்துவர் உள்பட 43 பேருக்கு கரோனா தொற்று

author img

By

Published : Aug 11, 2020, 1:05 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் இன்று மேலும் 43 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 69 ஆக உயர்ந்துள்ளது.

இதில் திருவாரூர் மாவட்டம் திருமகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருக்கும், மரக்கடை பகுதியைச் சேர்ந்த கணவன்- மனைவி ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று மன்னார்குடி மற்றும் குடவாசல் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களுக்கும் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் உள்ளிட்ட 43 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1300 படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.