ETV Bharat / state

விவசாய நிலங்களுக்கு பாதகம் ஏற்படுவதை அரசு அனுமதிக்காது: அமைச்சர் காமராஜ்!

author img

By

Published : Jul 30, 2020, 5:47 PM IST

திருவாரூர்: 'காவிரி டெல்டா விவசாய நிலங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 பற்றிய கேள்விக்கு அமைச்சர் காமராஜ் பதிலளித்துள்ளார்.

government will not allow any harm to agricultural lands: Minister About EIA Draft

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் இலவச மருத்துவ முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், குணமடைந்து வீடுகளுக்குத் திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இறப்பு சதவிகிதம் மிகக் குறைவாக உள்ளது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக கரோனா வைரஸ் தொற்று குறைந்துகொண்டே வருகிறது.

தமிழ்நாட்டில் ரேசன் அரிசி இலவசமாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு கொடுத்த நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ இலவச அரிசியும் சேர்த்து நவம்பர் மாதம் வரை கூடுதலாக அரிசி வழங்கப்படும்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நபிகள் நாயகம் போன்ற அரசியல், ஆன்மிகத் தலைவர்களை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்ட நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு மக்களைக் கூறுபோட நினைப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்படும் நெல் மூட்டைகள், அரசு கொள்முதல் செய்வதற்கு முன்னர் மழையில் நனைந்தாலும் உடனடியாக அந்த நெல்லை கொள்முதல் செய்து அனைத்து விவசாயிகளுக்கும், அரசுக்கும் எந்தவித நஷ்டமும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர் சந்திப்பு

மேலும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''காவிரி டெல்டா விவசாய நிலங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ளவேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.