ETV Bharat / state

விவசாயிகளின் குரல்வளையை நெறித்துள்ளது தமிழ்நாடு அரசு - பி.ஆர்.பாண்டியன் - கிராமசபைக் கூட்டம்

கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்தது விவசாயிகளின் குரல்வளையை நெறிக்கும் செயல் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

farmers
farmers
author img

By

Published : Oct 2, 2020, 6:29 PM IST

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், விவசாயிகளுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்றார். ஊராட்சிமன்ற தலைவரிடம் விவசாயிகளின் தீர்மானம் குறித்த கடிதத்தை அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க கோரினார்.

அப்போது, தமிழ்நாடு அரசு கிராமசபைக் கூட்டத்தை ஒத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும், கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பி வைப்பதாகவும் ஊராட்சிமன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, அலுவலகத்தை விட்டு வெளியே வந்த, பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “தமிழ்நாட்டில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடக்கும் கிராம சபைக்கூட்டங்களில் விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும், அதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்ற தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இதற்கு திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மத்திய அரசின் விவசாய விரோத சட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் எதிர் நிலை உருவாகும்.

விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு வர உள்ள நிலையில், கிராம சபைகள் தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் அது மத்திய அரசுக்கு எதிராகவும், வழக்கிற்கு சாதகமாகவும் அமைந்துவிடும்.

இதனால் மத்திய அரசின் தூண்டுதலால் தமிழ்நாடு அரசாங்கம், கரோனாவை காரணம்காட்டி கிராமசபைக் கூட்டங்களை நடத்துவதற்கு நள்ளிரவில் தடை விதித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது; விவசாயிகள் குரல்வளையை நெறிக்கும் செயல்.

கிராம ஊராட்சித் தலைவர்கள் நடத்துகின்ற கிராம சபைக் கூட்டங்களுக்கு அதுவும் காந்தி பிறந்த நாளில் நடைபெறும் கூட்டத்திற்கு தடை விதிப்பதற்கு தமிழ்நாடு அரசிற்கு சட்டப்படி உரிமையில்லை. இந்த ஒத்திவைப்பால் தீர்மானம் நிறைவேற்றாதது தற்காலிகம் தானே தவிர நிச்சயம் அடுத்த கிராம சபைக்கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றிய தீருவோம்” என்றார்.

இதையும் படிங்க : விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'- அமைச்சர் செங்கோட்டையன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.