திருவாரூர் மாவட்டம் குடவாசலில் புதிய ஊராட்சி ஒன்றிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனைத் தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வழியில் உள்ள குடவாசல் நகர நியாயவிலைக் கடையில் அமைச்சர் காமராஜ் திடீரென இறங்கி ஆய்வுமேற்கொண்டார்.
இதில், நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்க காத்திருந்த பொதுமக்களிடம் அரிசி மண்ணெண்ணெய், எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவாசிய பொருள்கள் உரிய நேரத்திற்கு கிடைக்கின்றதா, வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா மற்றும் சீனி அரிசி வாங்கும்போது எடைகள் குறைக்கப்படுகிறதா உள்ளிட்ட குறைகளை மக்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் பயோமெட்ரிக் முறை சரியாக செயல்படுகிறதா என ஆய்வுசெய்த பின் நியாயவிலைக் கடை பொருட்கள் வாங்க காத்திருந்த பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி அனுப்பிவைத்தார்.