தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே 274 இடங்களிலும், தற்பொழுது 104 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் திட்ட எண்ணெய் கிணறுகள் அமைக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கிராம பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறு முன்பாக, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெவித்து 10 கிராமங்களைச் சேர்ந்த 300க்கு ம் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உடம்பில் கரியை பூசி கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .