ETV Bharat / state

தொடர் மழையால் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: நிவாரணம் கோரும் விவசாயிகள்! - paddy damage

திருவாரூர்: தொடர் மழையால் இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ளன.

நெற்பயிர்கள் சேதம்
நெற்பயிர்கள் சேதம்
author img

By

Published : Aug 1, 2020, 3:49 PM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 24 ஆயிரத்து 366 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த 4 நாள்களாக இரவில் பெய்து வரும் கனமழையினால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் சாய்ந்தன.

குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் ஜெகநாதபுரம், பலவந்தம், கம்மங்குடி, நெம்மோலி, மாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த இரண்டாயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழைநீரால் முளைக்கத் தொடங்கியுள்ளன.

தொடர் மழையால் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

இந்த பயிர்களை அறுவடை செய்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள், இதற்கு முக்கிய காரணம் விளைநிலங்கள் அருகிலுள்ள சிறு, குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரப்படாததுதான் காரணம் என்கின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வேளாண்துறை அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது, ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தொடர் மழையால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.