கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி! - கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருவாரூரில் நடந்தது
திருவாரூர்: மன்னார்குடியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், கண் தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், "பார்வைக்கு ஓர் பயணம்" என்ற தலைப்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
இந்தப் பேரணி மன்னார்குடி அரிமா சங்க தலைவர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. அரிமா சங்க பிரமுகர்கள் தனியார் கல்லூரி மாணவிகள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் கண் தானம் செய்ய வேண்டியதன் அவசியம், கண் தானம் எப்படி செய்வது, ரத்ததானம் செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கோட்டூர் அரிமா சங்கம், நீடாமங்கலம் வட்டார இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள், நுற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், அரிமா சங்க ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நெகிழி ஒழிப்புப் பேரணி: 500-க்கும் மேற்பட்ட மாணாக்கர் பங்கேற்பு
TAGGED:
Thiruvarur district news