ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: கழிவுநீரை அப்புறப்படுத்திய அலுவலர்கள்

திருவாரூர்: ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் செய்தி எதிரொலியால் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி எதிரில் குளம்போல் தேங்கியிருந்த கழிவுநீரை பேரளம் பேரூராட்சி அலுவலர்கள் அப்புறப்படுத்தினர்.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி
author img

By

Published : Jan 1, 2021, 6:39 PM IST

திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சிக்குள்பட்ட புதுத்தெருவில் தனியாருக்குச் சொந்தமான மூன்று கட்டடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.

இந்தக் கட்டடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வெட்டவெளியில் விடப்பட்டது. இந்தக் கழிவுநீர் அங்குள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி எதிரில் குளம்போல் தேங்கியது. இதனால் மாணவர் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி

மேலும் அப்பகுதியில் மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் உள்ளதால், அதன் ஊழியர்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு பணிபுரிந்துவந்தனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி

இது குறித்து டிசம்பர் 20ஆம் தேதி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் செய்தி சேகரித்து அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றது. இந்நிலையில் பேரளம் பேரூராட்சி அலுவலர்கள் தனியார் கட்டட உரிமையாளர்களுடன் இணைந்து, அங்கிருந்த கழிவுநீரை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மணல், செங்கற்கலை கொண்டு அந்த இடத்தை நிரப்பினர்.

இதன் காரணமாக பொதுமக்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பேரளம் பேரூராட்சியின் அலட்சியம்: மாணவர் விடுதி முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.