திருவாரூர்: தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பரஞ்சோதி தலைமையிலான குழுவினர் பண்டாரவாடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி ஒமலூரை சேர்ந்த அர்ஜுனன் (38) இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அவரை வழிமறித்த பறக்கும் படையினர் வாகனத்தை சோதனை செய்தனர்.
அப்போது ஆவணமின்றி 4 லட்சத்து 11 ஆயிரத்து 120 ரூபாய் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் பரஞ்சோதி, காவலர் பிரம்மா ஆகியோர் பணத்தை கைப்பற்றி பேரளம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.
இரு நாள்களுக்கு முன் 10 லட்சத்து 32 ஆயிரத்து 953 ரூபாய் பணத்தை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுவரை 14 லட்சத்து 44 ஆயிரத்து 73 ரூபாய் பணம் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் அதிமுகதான் வெல்லும்!'