திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகேவுள்ள பண்டிதர் கோயில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செல்வம். இவர் அதே பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவரின் மனைவி சர்மிளா என்பவருடன் இடம் வாங்கியதில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சர்மிளா தனது ஆதரவாளர்களான சுரேஷ், பாஸ்கர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலுடன், பயங்கர ஆயுதங்களுடன் சென்று செல்வம் வீட்டின் கண்ணாடி மற்றும் இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்தனர்.
அதுமட்டுமில்லாமல், வீட்டிலிருந்த செல்வத்தின் மனைவி சுந்தரி, மகன் ராஜேஷ் ஆகியோரையும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறையிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோவில் கைது!