திருவாரூர் அருகே உள்ள சிங்களாஞ்சேரி கிராமம் வாயிலாக வாஞ்சியாறு பாய்கிறது. அக்கிராமத்தில் வசிக்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் நீர் தேவையை பூர்த்தி செய்வதே வாஞ்சியாறுதான்.
ஆனால் ஆற்று நீரில் மிதக்கிறது வெள்ளை நுரைகள். நீரின் தேவை காரணமாக இதை பொருட்படுத்தாது அவர்கள் பயன்படுத்துவதால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சாக்கடை கழிவுகளும் மாவட்ட காவலர்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் வாஞ்சி ஆற்றில் கலப்பதாலேயே இந்தத் துயரம் என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் வாஞ்சியாற்றின் வாயிலாகவே பாசன வசதி பெறுகிறது. அப்பகுதி கால்நடைகளுக்கும் வாஞ்சியாறுதான் நீர் ஆதாரம்.
மருத்துவக் கழிவுகள் கலந்து வரும் ஆறால் நிலங்களும் மாசடைவதோடு கால்நடைகள், பொதுமக்களும் நோயால் அவதி படுகின்றனர்.
இதை தடுக்க பல முறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் பலனில்லை என்று அப்பகுதி மக்கள் ஏக்கத்துடன் கூறுகின்றனர். தொடர்ந்து புகார் தெரிவித்தால் காவலர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.
இதையும் படிங்க; 'சைரன் காரில் மகன்... சைக்கிளில் பெற்றோர்' - எளிமை மாறாத வெள்ளந்தி மனிதர்கள்