ETV Bharat / state

’ரேஷன் கடையை மாற்றாதீர்கள்’: பொதுமக்கள் சாலை மறியல் !

author img

By

Published : Nov 13, 2019, 12:06 AM IST

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையைத் தொடர்ந்து செயல்படுத்தக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டையுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் பொதுமக்கள் சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த0 தொண்டியக்காடு பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்காக செயல்பட்டு வந்த ரேஷன் கடை கஜா புயலால் சேதமடைந்ததையடுத்து, அக்கடை தொண்டியக்காடு பகுதியில் மாற்றியமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மீண்டும் ரேஷன் கடையை அலுவலர்கள் மாற்றியமைக்கப் போவாதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட கட்டடம் பாதுகாப்பான முறையில் இல்லை எனவும், புதிய இடத்தில் செயல்பட்டு வந்த ரேஷன் கடை கிராமத்தின் மையப் பகுதியில் உள்ளதால் பாரபட்சமின்றி தொடர்ந்து அதே இடத்தில் செயல்படுத்தக் கோரியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டையுடன் இடும்பாவனம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் பொதுமக்கள் சாலை மறியல்

இந்த மறியல் போராட்டதால், முத்துபேட்டை - வேதாரண்யம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சாஃப்ட் பேஸ் பால்: தங்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Intro:Body:திருத்துறைப்பூண்டி அருகே கிராமத்தின் மைய பகுதியில் ரேஷன் கடையை தொடர்ந்து செயல்படுத்தகோரி நூறுக்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டையுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்து தொண்டியக்காடு பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி உள்ள குடும்பங்களுக்கு என செயல்பட்டு வந்த ரேஷன் கடை கஜா புயலால் சேதமடைந்ததையடுத்து கடை தொண்டியக்காடு பகுதியில் மாற்றியமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் அதிகாரிகள் பழைய இடத்திற்க்கே ரேஷன்கடையை மாற்றியமைக்க போவதாக கூறிய நிலையில் கஜா புயலால் சேதமடைந்த கட்டிடம் பாதுகாப்பான முறையில் இல்லை எனவும் புதிய இடத்தில் செயல்பட்டு வந்த ரேசன்கடை கிராமத்தின் மைய பகுதியில் உள்ளதால் பாரபட்சமின்றி தொடர்ந்து அதே இடத்தில் செயல்படுத்தகோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டையுடன் இடும்பாவனம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போரட்டத்தால் முத்துபேட்டை -வேதாரண்யம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.