திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற 25ஆம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதையொட்டி, 60 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்குட்பட்டவர்கள் தேரோட்டத்திற்கு வருவதைத் தவிர்க்கவும். மேலும் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள் கண்டிப்பாக வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு முன் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். அனைவரும் கைகளை சுத்தமாகக் கொண்டு, தனிமனித இடைவெளி குறைந்தது ஒரு மீட்டர் தூரம் வரை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மேலும் கரோனா அச்சத்தால் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளதால் அதிகமான மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதையடுத்து, பொது சுகாதார சட்ட நடைமுறைப்படி முகக்கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத தனி மனிதர்கள், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் ஆகியோரின்மீது 200 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை சட்ட விதிகளுக்கு உட்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மழை நீர் சேகரிப்பு பரப்புரையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி