paddy procurement center: திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சாகுபடி பணிகளில் ஈடுபட்ட 50 நாள்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்த காரணத்தினால் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியது.
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 42 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்ட திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேரடியாக வந்து ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு நிவாரணம் என்பது தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்பின் நிவாரணம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் இதுவரை விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் என்பது வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான காமராஜ் தலைமையில் அதிமுகவினர் நிவாரணம் வழங்க திமுக அரசை கண்டித்து நன்னிலம் பேருந்து நிலையம் அருகே சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர், “டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி இருக்கிறது. ஆன்லைன்ல பதிவு செய்து கொள்முதல் செய்வது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று எளிய முறையில் கையாள வேண்டும்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அமைச்சர் பொங்கல் பரிசு பெயிலியர் தான் என்றும், அதை விவாதிக்க நான் தயாராக உள்ளேன். பொங்கல் பொருள்கள் குறைபாடுதான், இது அதிமுக குற்றச்சாட்டு இல்லை பொதுமக்களின் குற்றச்சாட்டுதான்.
மிளகுக்கு பதில் பப்பாளி விதை கொடுத்தாங்க, தவறு செய்த அத்தனை பேர் மீதும் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், முதலமைச்சர் ஒரு நொடியில் நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறினார்.
இதையும் படிங்க: Punjab Assembly Polls: கல்லூரி மாணவிகளுக்கு எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்!