திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம். இதில் சம்பா குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடும் நிலையில் பெருமளவில் விவசாயிகள் அதிகம் டீசல் என்ஜினை கொண்டு சாகுபடி செய்து வருகின்றனர்.
அவ்வப்போது ஒன்றிய அரசு தொடர்ந்து டீசல் விலையை உயர்த்துவதால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 60 விழுக்காடு விவசாயிகள் டீசல் இயந்திரத்தையே பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.
சிறு குறு விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, டீசல் இயந்திரத்தை கொண்டு சாகுபடி செய்து வரும் விவசாயிகளை உரிய கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று(ஆக.14) தாக்கல் செய்யப்பட்ட வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு திரு கோரிக்கை விடுத்துள்ளனர்.