திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் இறப்புக்கு பிறகு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் கிராமத்தில் மத்திய அரசின் கணிமவளத் துறை சார்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், பொங்கு நீரூற்று என்ற பெயரில் மூடப்படாமல் ஒரு மீட்டர் அகலத்தில் 1500 அடி ஆழத்தில் உள்ளது.
இந்த கிணற்றை தற்காலிகமாக நேற்று செங்கல் வைத்து மூடியும் நான்கு புறமும் கயிற்றால் கட்டப்பட்டது. இந்தக் கிணறு அருகில் தனியாருக்குச் சொந்தமான பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள பயனற்ற ஆழ்குழாய்க் கிணறுகள் பல்வேறு கிராமங்களில் உள்ளன. அவற்றை உடனடியாக மூட வேண்டும். அதுபோல எங்கள் கிராமத்தில் கனிமவளத் துறை சார்பில் தோண்டப்பட்டு பயனற்ற நிலையில் உள்ள 1500 அடி குழியை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேன்டும் என்றனர்.
இதையும் படிங்க : ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்ட இடத்தில் ஆட்சியர் ஆய்வு!