தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், திருவாரூரில் கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக கனமழை பெய்தது.
குறிப்பாக நன்னிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொல்லுமாங்குடி, கொல்லாபுரம், மாங்குடி, சங்கமங்கலம், திருக்கொட்டாரம், வேலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கனமழையால் வயலிலேயே சாய்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இந்த பயிர்களை அறுவடை செய்தால் நெல்லின் ஈரப்பதம் 25 விழுக்காட்டுக்கும் மேலாக இருக்கும் என்பதால் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவார்கள். எனவே, விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பதம் பார்க்காமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். அறுவடை நேரத்தில் விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடில்லாமல் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்புக்கு பெரும்பாலான பெற்றோர் விருப்பம் - பள்ளிக் கல்வித்துறை தகவல்