அந்த மனுவில் "திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள ராதாநல்லூர் வருவாய் கிராமத்திற்கு உள்பட்ட ஆத்தூர், கல்யாணசுந்தரபுரம், கடுவங்குடி, உமாமகேஸ்வரபுரம், உள்ளிட்ட அதனைச்சுற்றியுள்ள 9-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா தாளடி பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால் 2019- 20 ஆம் ஆண்டிற்கான இழப்பீட்டு தொகை ஏக்கருக்கு 470 ரூபாய் கொடுத்தும் எங்களுடைய இந்த ஒன்பது கிராமங்களின் பெயர்களும் விடுபட்டுள்ளது.
எனவே இந்த ஒன்பது கிராமத்தின் பெயர்களையும் பயிர் காப்பீடு நிறுவனம் ஆய்வு செய்ததோடு, பயிர் காப்பீடு நிறுவனத்தில் விடுபட்ட கிராமங்களின் பெயர்களை சேர்த்து பயிர்காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மின்வாரியப் பணிகளை தனியாருக்கு வழங்கும் விவகாரம் - தமிழ்நாடு முழுவதும் ஊழியர்கள் போராட்டம்