ETV Bharat / state

‘குடியுரிமை திருத்தச் சட்டம் பாதிப்பு குறித்து முதலமைச்சருக்கு எதுவுமே தெரியவில்லை’ - cpm balakrishnan speech in caa

திருவாரூர்: தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து முதலமைச்சருக்கு தெரியவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

திருவாரூர்: தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் வரக்கூடிய பாதிப்புகள் பற்றி முதலமைச்சருக்கு தெரியவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

author img

By

Published : Feb 21, 2020, 7:57 AM IST

திருவாரூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆண்டுகளாகப் போராடிய விவசாயிகளுக்கு டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும், என சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்ற அறிவிப்பு பல ஆண்டுகளாகப் போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

அந்தவகையில் இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வரவேற்கிறது. அதேபோல் மத்திய அரசு இதுவரை ஹைட்ரோகார்பன் எடுக்கக் கொடுத்திருக்கும் அனுமதிகள் ரத்து செய்யப்படுமா? என்பது குறித்த விளக்கத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுவதால் இச்சட்டம் இயற்றி எந்த பயனும் இல்லை” என்றார்.

மேலும், “பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலையில் மத்திய அரசு ஒப்புதல் கொடுக்காததால்தான் ஆளுநர் இதுவரை முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார். இதில் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் கடத்துகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அசாம் மாநிலத்தில் 19 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டது எப்படி தெரியாமல் போனது. இச்சட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டால் முதலமைச்சர் வந்து காப்பாற்றுவாரா?” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்.பி.ஆர். சட்டம் குறித்து ஸ்டாலின் படித்து தெரிந்துகொள்வது நல்லது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.