கரோனா தொற்று பரவும் அபாயத்தைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்தார். இச்சூழலில் தமிழ்நாடு அரசு மக்களை ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. எப்போதும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு நாளில் 1,000 முதல் 2,000 முறை புறநோயாளிகள் வந்து செல்வர். ஆனால் இன்று நோயாளிகளும், பொதுமக்களும் மருத்துவமனைக்கு வராததால் மருத்துவமனை சாலைகளும், மருத்துவமனை வளாகமும் வெறிச்சோடி காணப்பட்டது.
கரோனா அச்சம்.. அரண்மனையை மாற்றிய மகாராணி
மேலும் மருத்துவமனைக்கு இயக்கப்படும் பேருந்துகளும், ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டதால் நோயாளிகளும் பொதுமக்களும் வர முடியாத சூழல் நிலவியது.