திருவாரூரில் இன்று மாலை நடைபெறும் விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளார்.
அப்போது திருவாரூர் நோக்கி வந்த போது, நீடாமங்கலம் பகுதியில் உள்ள வயலில் இறங்கி நாற்று பறித்துக் கொண்டிருந்த விவசாயிகளைப் பார்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வயலில் இறங்கி விவசாயிகளோடு சேர்ந்து விவசாயியாக நாற்றினை நட்டார். இந்தக் காட்சி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து முதலமைச்சருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் கலந்துகொள்ளும் எந்த மேடையென்றாலும் வார்த்தைக்கு வார்த்தை தன்னை விவசாயி என்று தெரிவித்துக்கொள்வார். அதற்கேற்றார்போல் அவர் வயலில் இறங்கி நடவு நட்டது விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்து விவசாயி ஒருவரிடம் கேட்டபோது, ' தமிழ்நாட்டின் முதலமைச்சர் தங்கள் பகுதியில் உள்ள வயலில் இறங்கி நாற்று எடுத்து, நடவு நட்டது, தங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும்' ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.
மேலும், மின் பற்றாக்குறை, நெல் அறுக்கும் இயந்திரங்கள் தேவை என தங்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கூறியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நட்புக்கு இலக்கணம் பேராசியர் - திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா ட்வீட்