திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டையில் மத்திய திறன் மேம்பாடு தொழில் முனைவோர் அமைச்சகத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தின விழாவும், தொழிற்கல்வி பயின்ற பயனாளிகளுக்குச் சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றன.
இவ்விழாவில் மக்கள் கல்வி நிறுவனத் தலைவர் கலைவாணி தலைமை வகித்தார். திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன திட்ட அலுவலர் திருலோகச்சந்தர் திட்ட விளக்க உரையாற்றினார்.
ஊராட்சி மன்றத் தலைவர் எழிலரசி, மன்னார்குடி இன்னர்வீல் மகளிர் அமைப்புத் தலைவர் டாக்டர் சித்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மகளிர் குறித்த எழுச்சியுரையாற்றியதோடு 2019, 2020 ஆண்டுகளில் தொழிற்கல்வி பயின்ற பயனாளிகளுக்குச் சான்றிதழ்களையும் வழங்கினர்.
இதையும் படிங்க: ஒருங்கிணைந்த நீதிமன்ற உலக மகளிர் தின நிகழ்ச்சி