ETV Bharat / state

'குடிநீர் பற்றாக்குறையை காவிரிதான் தீர்க்கும்' - பி.ஆர். பாண்டியன்

author img

By

Published : Jul 10, 2019, 7:23 PM IST

திருவாரூர்: "குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது காவிரி நீர்தான் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசு ராசி மணல் அணை கட்டுவதற்கு முன் வரவேண்டும்" என்று, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

pr pandian

இது குறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது, "காவிரி நீர் குறித்து அனைத்து அதிகாரங்களும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஆணைய அனுமதியில்லாமல் தன்னிச்சையாக மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு விண்ணப்பித்ததை ஏற்று ஆய்வுக்கு மத்திய அரசின் நீர்வளத்துறை அனுமதி அளித்தது கண்டனத்திற்குரியது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. ஆய்விற்கு மட்டும்தான் அனுமதி என்றும் அணை கட்ட முடியாது எனக் கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்த நிலையில், கர்நாடக அரசின் அனுமதி பெறுவதற்கான ஆய்வு அறிக்கை முழுவதையும் வரும் 19ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கையாகும். எனவே அந்த அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி, அதன் பிறகு அனுமதி பெற மத்திய சுற்றுச்சூழல் துறை முன் வரவேண்டும்.

பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இதனை வலியுறுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் சுற்றுச்சுழல் துறை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது காவிரி நீர் மட்டும்தான். எனவே காவிரிக்கு மாற்று காவிரிதான் என்பதை உணர்ந்து காவிரி உபரி நீர் கடலுக்கு செல்வதை தடுத்து நிறுத்த ராசி மணல் அணை கட்டுவதற்கு அரசு முன் வரவேண்டும். அதற்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, காவிரி ஆணையத்திற்கு அனுப்பிவைத்து அனுமதி பெற வேண்டும். இல்லையேல் தமிழ்நாடு முழுவதும் நீரின்றி பாலைவனமாக மாறிவிடும்" என தெரிவித்தார்.

Intro:Body:மேகதாட்டு அனைகட்ட அனுமதி வழங்க கூடாது மத்திய சுற்று சூழல் துறைக்கு பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் கண்டனம்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்துவிவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர்,

தமிழகத்தை அழிக்கும் நோக்கோடு சட்டத்திற்கு புறம்பாக மேகதாட்டு அனைகட்ட அனுமதி அளிப்பது குறித்து வரும் 19ம் தேதி மத்திய சுற்றுசூழல் துறை முடிவெடுக்க உள்ளதாக வெளி வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

காவிரி குறித்து அனைத்து அதிகாரங்களும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் ஆணைய அனுமதியில்லாமல் தன்னிச்சையாக மேதாட்டு அணை கட்ட மத்திய அரசுக்கு கர்நாடகம் விண்ணப்பித்ததை ஏற்று ஆய்வுக்கு மத்திய அரசின் நீர்வளத் துறை அனுமதி அளித்தது.
இந்நடவடிக்கை தவறு என்றும அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதாகும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதற்கு ஆய்விற்கு மட்டும்தான் அனுமதி என்றும் அனை கட்ட முடியாது என நீதிமன்றம் உத்திர விட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி குறித்து முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் படைத்த ஆணையம் அமைத்ததை துவக்கத்திலிருந்தே எதிர்த்து வரும் கர்நாடக அரசு அதனை முடக்கும் மறைமுக சதித் திட்டத்தோடு ஆணையத்திற்கு தெரியப்படுத்தாமல் குறுக்கு வழியில் அனைகட்ட அனுமதி பெற சட்டவிரோதமாக மேற்கொள்ளும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசின் சுற்று சூழல் துறை துணை போவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

கர்நாடக அரசின் அனுமதி பெறுவதற்கான ஆய்வு அறிக்கை முழுவதையும் வரும் 19ம் தேதி பரிசீலினைக்கு எடுத்துக் கொள்வது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கையாகும். எனவே அவ்வறிக்கையை காவிரி மேலாண்மை அணையத்திற்கு அனுப்பி அதன் அனுமதி பெற சுற்று சூழல் துறை முன் வரவேண்டும்.

தமிழக அரசு சட்டமன்றத்தில் மத்திய அரசின் சுற்று சூழல் துறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் சுற்று சுழல் துறை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கைகளை விரைந்து மேற்க்கொள்ள வேண்டும்.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது காவிரி நீர் மட்டும் தான். எனவே காவிரிக்கு மாற்று காவிரி தான் என்பதை உணர்ந்து காவிரி உபரி நீர் கடலுக்கு செல்வதை தடுத்து ராசி மணல் அனை கட்டுவதற்கு தமிழக அரசு முன் வரவேண்டும். அதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி காவிரி ஆணையத்திற்கு அனுப்பி வைத்து அனுமதி பெற வேண்டும். இல்லையேல் தமிழகம் பாலைவனமாக மாறும் என எச்சரிப்பதாக தெரிவித்தார்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.