ETV Bharat / state

உணவின்றித் தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்!

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து உணவின்றித் தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

உணவின்றி தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்

author img

By

Published : Jun 14, 2021, 3:26 PM IST

Updated : Jun 15, 2021, 9:13 AM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் ஆதியன் (பூம்பூம் மாட்டுக்காரன்) இன மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆதியன் இன மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இவர்கள் அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டை கொண்டு ஊர் ஊராக சுற்றி மக்களிடம் குறிசொல்லி, வேடிக்கை காட்டி யாசகம் பெற்று வருகின்றனர். அதில் வரும் சொற்ப வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

உணவின்றித் தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்

ஆதியன் இன ஆண்கள் மாடுகளை பழக்கி வித்தை காட்டி யாசகம் பெற்று வருகின்றனர். பெண்கள் கோயில் திருவிழாக்கள், சந்தைகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் ஊசிமணி, வளையல், தோடு, திருஷ்டிகயிறு போன்ற பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

உணவின்றி தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்
உணவின்றித் தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்

ஆனால், தற்பொழுது கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து உணவிற்கே வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து ஆதியன் இன மக்கள் கூறியதாவது, "திருவாரூர் மாவட்டம் முழுவதும் எங்கள் இன மக்கள் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது மாடுகளை வைத்து பராமரிக்க முடியாததால், நாங்கள் மாடுகள் இல்லாமல் வீடு வீடாக சென்று யாசகம் பெற்று வருகிறோம்.

உணவின்றித் தவிக்கும் பூம்பூம் மாட்டுக்கார குடும்ப குழந்தைகள்

எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. தொழிலுக்காக வெளியே சென்றாலும் காவல் துறையினர் அடித்து விரட்டுகின்றனர். எங்களுக்கு அரசின் சார்பில் எந்த ஒரு உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லை.

வறுமையில் தவிக்கும் குடும்பத்தலைவி

எங்கள் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் எங்கள் இன மக்களுக்கு எஸ்டி பிரிவு என ஜாதி சான்றிதழ் வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும்" என கேரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: யாருக்கு கொறடா, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி?

Last Updated : Jun 15, 2021, 9:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.